கிரேக்க நாட்டில் ‘தயாஐயன்’ என்றொரு ஞானி இருந்தான். அவனிடம் ஒரு நாய் இருந்தது. பகலில் கூட அவன் விளக்கைப் பிடித்து மனிதரைத் தேடுவான். மனிதரைப் பார்க்கப் பார்க்க தனது நாயிடம் அதிக அன்பு உண்டாகின்றது’ என்றான். ‘பிறகு யார்தான் மனிதன்?’ என்று பிளேட்டோ கேட்டான். ‘ அதோ ஒரு மனிதன்’ என்று காட்டினான். ஆம்! அவனே சோக்ரதன். அதேபோன்று பட்டம், பதவி, தம்பட்டங்களுக்கிடையே ஒரு தூய தியாகியாக, மேதைகளுக்
கெல்லாம் மேதையாகவும், மனித குலத்தின் மாண்புமிகு சின்னமாகவும், ஆசியாவிலே தலைசிறந்த அரசியல் அறிவாளியாகவும், சான்றோனாகவும், இந்திய நாட்டின் நன் மக்களுள் ஒருவராகவும், சாணக்கியராகவும் விளங்கியவர் ‘அண்ணல் காந்தியடிகள்’. இவரின் பிறந்த தினம் இன்று ஒக்டோபர் 2ஆம் திகதியாகும்.
பழம் பெருமை மிக்க நம் பாரத நாடு எத்தனையோ இன்னல்களுக்கு இலக்காகி விளங்கிய பொழுது அதன் விடுதலைக்காக, சுதந்திரத்திற்காக தமது உயிரை துச்சமென நினைத்து, இந்திய மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் அளப்பெரும் தியாகத்தை செய்து நாட்டை வெள்ளையருடைய ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.
எத்தனையோ தலைசிறந்த அறிஞர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், மாமேதைகள் இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பொழுதிலும் ‘நான் ஒரு இந்தியன்’ என்று பெருமையை தேடித் தந்தவர் காந்தியடிகள் ஆவார்.
இந்தியாவை வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட பொழுது மக்கள் விழித்தெழுந்தனர். ‘வெள்ளையனே வெளியேறு’ என்று கோஷம் எழுப்பினர். தமிழகத்திலே பாரதியார், இராஜகோபாலச்சாரியார் போன்ற பெருமக்கள் வீறுகொண்டெழுந்
தனர். ராஜா ஜீ சென்னையிலே சட்டக் கல்லூரி மாணவராகப் பயின்று கொண்டிருந்த பொழுது அவரது சிந்தனைகள் எல்லாம் இந்திய நாட்டின் மக்களைப் பற்றியும், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் இழிநிலை பற்றியுமே எண்ணமிடலாயின. இக்கால கட்டத்திலே நாட்டிலே விடுதலைவேட்கை தளிர் விட்டிருந்த காலம், ஆத்மீகத்தோடு அரசியலையும் கலந்து வாழ்ந்த அற்புதப் பிறவி காந்தி மகானின் அருமருந்தன்ன சீடராகவும், சான்றோனாகவும், சாணக்கியராகவும் விளங்கியதோடு இந்திய நாட்டின் விடுதலைக்காக காந்தியடிகளோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்.
மோகன்தாஸ் கரம்சண்ட் காந்தி அடிகள் 1915ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார். இதன் காரணமாக, வழக்கறிஞராக விளங்கிய காந்தியடிகள் தமது தொழிலைத் துறந்து, குடும்பத்தை மறந்து, அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்காகப் பற்பல தியாகங்களைச் செய்தார்.
காந்தியடிகள் தென் ஆபிரிக்காவில் வழக்கறிஞராக தமது தொழிலைச் செய்து கொண்டிருந்த பொழுது பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராக வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம் ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது இவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்று அவருடைய பாதணியையும், பொருட்களையும் வெளியே தூக்கி எறிந்ததோடு, காந்தி அடிகளையும் வண்டியிலிருந்து தூக்கி எறிந்து விட்டனர் வெள்ளையர்கள். இதன் காரணமாக வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவும், நாடு சுதந்திரம் அடையவும் திடசங்கற்பம் பூண்டார்.
காந்தியடிகள் நாடு சுதந்திரம் அடைவதற்காக சத்தியாக் கிரகத்தை மேற்கொண்டார். அந்நியரின் அடக்குமுறையை ஒத்துழையா இயக்கத்தின் மூலம் செய்து காட்டினார். தமது அமைதியான, எவருக்கும் தீங்கு விளைவிக்காத மனப்பான்மை மூலம் பிரித்தானிய சாம்ராட்யத்தை தலைகுனிய வைத்தார். இதன் காரணமாக வெள்ளையர்கள் திகைப்படைந்தனர். என்ன செய்வது என்று தெரியாது தடுமாறினார்கள்.
இவை யாவற்றிற்கும் காரணமாக அமைந்தது இவர் சிறு வயதிலே கண்டுகழித்த அரிச்சந்திர நாடகமேயாகும். இவ் நாடகத்திலே சொல்லப்பட்ட வசனங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. அதாவது, ‘பதி இழக்கிலும், பாலனை இழக்கினும், கதி இழக்கினும், கட்டுரை இழக்கிலேன்? கட்டுரை என்பது வாய்மை.
இதுவே காந்தியடிகள் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு தூண்டுகோலாக அமைந்தது. அதுவே அவரின் வெற்றியும் ஆகும். மற்றையது மகாபாரதத்தில் கிருஷ்ண பகவானால் அருச்சுனனுக்குப் போதிக்கப்பட்ட ‘பகவத்கீதையாகும்’ எத்தகைய பிரச்சினைகள் வந்த பொழுதும், கடமையில் நின்று வெளியேறக்
கூடாது. பிரச்சினைகள் வந்தேதான் ஆகும். ஆயினும், ‘பிரச்சினைகளைத்தக்க முறையில் ஆராய்ந்து, தீர்வு காண்பதே சிறந்தது என்பதை காந்தியடிகள் தமது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் தவறாது கடைப்பிடித்தார். இது மட்டுமன்றி தமது எதிரிகளின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பளித்தார். தன்னை எதிர்த்தவர்களையும் சாதுரியமாக வெல்ல முடியும் என்பதை நன்கறிந்திருந்தார்.
ஒருசமயம் புதுடெல்லியில் அமைந்திருந்த ‘Vicerory” மாளிகைக்கு LORD ERWIN என்பவரை சந்திக்க காந்தி அடிகள் சென்றிருந்தார். இதை அன்றைய காலகட்டத்தில் இருந்த பிரித்தானிய பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் மிகவும் கடுமையாக விமர்சித்தார். அரை நிர்வாணத்தோடு இருக்கின்ற பாதிரியாராகிய காந்தி,
பிரித்தானிய சாம்ராச்சியத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற ‘Vicerory” அரை நிர்வாணத்தோடு காண்பதற்குச் செல்கின்றார் என்று மிகவும் கடுமையாகச் சாடினார். அதற்கு காந்தி அடிகள் ‘வின்ஸ்ரன் சேர்ச்சிலுக்கு’ கடித மூலம் கூறியது என்னவெனில், நீங்கள் கூறியதை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதை நான் தவறாது என்றும் கடைப்பிடிக்க நினைத்தேன். இதை இன்று நான் செய்து காட்டியுள்ளேன். ஆகையினாலே நீங்கள் கூறியது உண்மையிலேயே ஒரு பாராட்டாக நான் மதிக்கிறேன் என்று கூறி ‘வின்ஸ்ரன் சேர்ச்சிலின்’ வாயை அடக்கினார்.
இதுமட்டுமன்றி ஒரு சமயம் காந்தி அடிகள் நாட்டின் அமைதிக்கு இன்னல் விளைவித்ததாகக் கூறி கோட்டில் ஆஜராகுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். அச்சமயம் கோட்டில் இருந்த அனைவரும் காந்தியைக் கண்டு எழுந்து மரியாதை செய்தனர். இதைக் கண்ணுற்ற வெள்ளைக்கார நீதிபதியும் எழுந்து அவருக்கு மரியாதை செய்ய நேரிட்டது. ஒரு கைதிக்கு நீதிபதி, அதுவும் வெள்ளைக்கார நீதிபதி மரியாதை செய்தது இதுவேயாகும்.
வழக்கை விசாரித்த நீதிபதி காந்தியை நோக்கி கூறியது என்னவெனில், ‘நீங்கள் மக்களின் மனதில் ஒரு ஞானியாக கடவுளாகக் கருதப்படுவதை நான் அறிவேன். ஆயினும் கூட சட்டத்தின் படி உங்களுக்கு ஆறுமாதக் கடும் தண்டனை வழங்குகிறேன் என்று தமது தீர்ப்பில் வாசித்தார். அப்போது காந்தி அடிகள் கூறினார், ‘கனம் நீதிபதி அவர்களே’ நீங்கள் எனக்கு குறைந்த தண்டனையை வழங்கியிருக்கிறீர்கள் என்று’.
அப்போது கோட்டில் கூடியிருந்த மக்கள் கண் கலங்கி அழத் தொடங்கினார்கள். இவர்களை நோக்கி, ‘காந்தியடிகள் கூறியதாவது, ‘மணமகளை, மணமகன் முதலிரவு சந்திக்கப் போவது போன்று, சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி மக்களை சாந்தமடையச் செய்தார். ஆகையினாலே காந்திமகான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சலனமடையவில்லை. எதையும் தாங்கும் ‘செயல் வீரனாகவே’ வாழ்ந்தார்.
இன்னும் ஒரு சமயம் உலகப்புகழ் ரவிந்திரநாத் தாகூருக்கும் காந்தி அடிகளுக்கும் முக்கிய சம்பாஷணை நடைபெற்றது. அப்போது ரவிந்திரநாத், ‘உலக இயற்கை அழகை விபரித்தார்’ இதை நீங்கள் உலக மக்களுக்குக் கூற வேண்டும் என்று காந்தியைக் கேட்டுக் கொண்டார். அதற்கு காந்தி அடிகள் ‘இவற்றை எல்லாம் எப்படி ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு என்னால் கூற முடியும் என்று சொல்லி ரவிந்திரநாத் தாகூரின் பேச்சை அடக்கினார்.
காந்தி அடிகள் இந்தியா எக்காரணத்தைக் கொண்டும் பிரிக்கப்படக்கூடாது என்று கூறிய பொழுது, ‘ஜின்னா’ எப்படியாகிலும் பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று தீவிர கொள்கையோடு நின்றார். அச்சமயம் Mount Batten இந்தியாவிற்கு Viceroy ஆக அனுப்பப்பட்டு நாடு பிரிக்கப்பட்டது.
இதை காந்தி அடிகள் வன்மையாகக் கண்டித்தார். ஆயினும் சில தீவிர இளைஞர்கள் காந்தியின் கொள்கையை ஆதரிக்காது அவரைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானார்கள். காந்தி அடிகள் பிரார்த்தனைக்குச் செல்லும் போது, ‘கோட்சே’ என்பவள் காந்தி அடிகளை நோக்கி ரிவோல்வரால் சுட்டுக் கொன்றான்.
இதை கேள்விப்பட்ட உலக மக்கள் கலங்கினார்கள். கண்ணீர் விட்டார்களே. அன்றைய காலகட்டத்தில் இந்திய பிரதமராக இருந்த, ‘ஜவஹர்லால் நேரு’ தமது உரையில் கூறியதாவது, ‘இந்திய நாட்டின் விலைமதிக்க முடியாத தந்தை’ காந்தியடிகள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆயினும் அவர் உண்
மையிலேயே ஒரு ‘அமரதீபம்’. எதிர்வரும் காலத்தில் காந்தி அடிகள் மக்களின் மனதிலே என்றும் அழியாத தீபமாக விளங்குவார் என்று தமது உரையிலே கூறினார்.
காந்தியடிகள் தருமமே நல்லாட்சியின் அஸ்திவாரம் என்று முடிவான கருத்துடன் அரசியலைத் தூய்மை செய்தவர்.
ஜனநாயகம் என்பது அனைவரினதும் ஆத்மீக பலத்தையே சார்ந்தது என்று முற்றுணர்வுடன் சிறுபான்மையினரின் நியாயமான நலன்களுக்காகப் போராடினார். ஏழை மக்கள், குறைந்த சாதியினர் யாவரையும் கடவுளின் பிள்ளைகள் என மதித்து வாழ்ந்ததோடு, தனிமனிதர் ஒவ்வொருவரின் சிறப்புப் பண்பும் பூரணமாக பொலிவுற்று அதன் விளைவாகத் தேசம் முழுவதும் சுபீட்சம் காண வேண்டும் என்ற உணர்வில் நிலைத்து நின்று வாழ்ந்தவர் காந்தி அடிகள்.
காந்தியைச் சரியாகப் புரிந்துகொள்ளாத வர்கள் அல்லது வேண்டுமென்றே சுயநல னுக்காக அவரைச் சரியாக புரிந்துகொள்ள மறுப்பவர்கள், அவரை எதிர்த்தார்கள். காந்தி அடிகள் எதிர்ப்புக்களினின்று எட்டாத தொலைவில் நின்று பணி புரிந்தார். எந்தக் கருமேகமும் தொட முடியாத ஹிமாலயப் பனிமுடியாக, அவர் பரம நிர்மலமாக மகோன்னதமாக வாழ்ந்த உலகப் பேரொளி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக