வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கணவன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.
சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக