siruppiddy

வெள்ளி, 19 ஜூன், 2015

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் உறவைத் தேடு..!

மீளாத வாழ்வுக்குள்
தீராத போராட்டம்.
வாழ்க்கை ஒரு
வெளிச்சக் கூடு
வாசலைத் தேடு.!

பெருமை பேசும்
பொல்லாமை நீக்கு
பெண்மையைச்
சீண்டும்
வஞ்சகரை விரட்டு.
கதைகளைக் குறை
விதைகளை
விருட்சமாக்கு.!

வாதைகளை வாங்காதே
போதைக்குள் போகாதே
போகப் பொருளாய்
எதையும் எண்ணாதே
அமைதிக்கு கைகொடு.

உணர்வைப் பகிர்ந்திட
ஒருவரைத் தேடு
அச்சம் தவிர்த்து
பட்சம் வை! மிச்சம்
இன்றி அன்பைச் சொரி.

உள்ளம் கைக்குள்
உலகம் உருளுது
உண்மைத் தோப்பில்
ஊஞ்சலை ஆட்டு
துஞ்ச மறுக்கும்
விழிகளுக்கு வஞ்சம்
செய்யாதே! நெஞ்சக்
கூட்டில் இன்பம்
சுரக்கும்..!. சுமைகளைத்
தாங்கும் தூய
உறவைத் தேடு..!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக