siruppiddy

சனி, 30 ஏப்ரல், 2016

ஓர் எச்சரிக்கை வெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு !

சுவிஸ்க்கு செல்ல முற்பட்டு துருக்கியில் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணமான முல்லைத்தீவைச் சேர்ந்த காண்டீபனின் சடலம் இன்று முல்லைத்தீவுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது. காண்டீபன் இறந்ததைக் கேட்டு அவரது தாயாரும் அதிர்ச்சியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு ஆசையில் தவறான நபர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படுபவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்!  இங்குஅழுத்தவும்...

மே தினத்தில் 18 கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நிகழ்வு !

உழைக்கும் மக்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறீலங்காவின் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலினடிப்படையில் 18 இடங்களில் கூட்டங்களும் 17 இடங்களில் ஊர்வலங்களும் நடைபெறப் போவதாகவும் இந்த இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு, காலி உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதுடன் இதுவரை...

வியாழன், 28 ஏப்ரல், 2016

மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு!:

புதுச்சேரியில் சமீபத்தில் திராவிட விடுதலைக் கழக அமைப்பினர் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.எஸ்.குமார். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம்...

புதன், 27 ஏப்ரல், 2016

பதின்ஐந்து கிராம் ஹெரோயினுடன் சிறை அதிகாரி கைது!

ஹெரோயின் பதின்ஐந்து கிராமுடன் சிறைச்சாலை அதிகாரியொருவரும், பாதால உலக உறுப்பினர் ஒருவரும் பண்டாரகம, விதாகம தெல்கஸ்வந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மீண்டும் விரைவில் ஆரம்பமாகும் காங்கேசன்துறை சிமேந்து தொழிற்சாலை

  யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ். கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், "மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள்,...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உணவுக் கடை ஒன்றில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பம் !

காத்தான்குடியில் சுகாதாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பத்தை விற்பனை செய்த வெதுப்பக வர்த்தகர் ஒருவருக்கெதிராக நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பிரபல வெதுப்பகமொன்றில் நேற்று கொள்வனவு செய்யப்பட்ட வட்டிலப்பத்திலேயே இவ்வாறு பூஞ்சனம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து,...

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

துர்முகி வருடம் நாளை மாலை 6.36 மணிக்கு உதயமாகிறது

பிறகின்ற தமிழ், சிங்கள துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என எமது இணையங்கள் வாழ்த்துக்களை  கூறிநிற்கின்றது   . மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13ஆம் திகதி இரவு 6.36 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல்...

சனி, 9 ஏப்ரல், 2016

குளியல் அறைக்குள் பாம்பு தீண்டியதில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் இன்று மதியம் வெப்பம் தாங்க முடியாமல் பாம்பு ஒன்று முதியவர் ஒருவரின் குளியல் அறைக்குள் சென்று படுத்திருந்தது.  அதை அறியாத முதியவர் குளிக்கச் சென்ற போது பாம்பு அவரைத்தீண்டியுள்ளது. அளம்பில் பிரதேசத்தை சேர்ந்த  முதியவர்  பாம்பின் தீண்டலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த முதியவரை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் இடையில் உயிரிழந்துள்ளார். தற்பொழுது மாவட்ட வைத்தியசாலையில்...

புகையிரதக்கடவையில் ஒருவர் பாய்ந்து தற்கொலை

வவுனியா குருமன்காட்டு பகுதியிலுள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதிநேற்று இரவு 7 மணியளவில் யுவதி ஒருவர் பாய்ந்து தற்கொலை. தற்கொலை செய்து கொண்டவர் முல்லைத்தீவு அலம்பிலை சேர்ந்த 51வயதுடைய செபஸ்ரியன்பிள்ளை பீட்டர் என தவகல்  கிடைத்துள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...