siruppiddy

வியாழன், 12 மார்ச், 2015

புலவூரான் ரிஷி எதற்க்கானது....

இடைவெளியின்
நீட்சியில் 
பரப்ப முடிந்த
உன் மாசற்ற
புன்னகைகளை
இப்போதெல்லாம்
எங்கு தொலைத்தாய்
பெண்ணே?

பாச வெளிகளில்
சிதறிய இராட்சத
பொய்களின்
கொடூர சிரிப்பின்
அனல் காற்றில்
கூதல் தணிக்கும்!
சாட்சியங்களற்ற
முத்தங்களை_

மீள வறுகையில்
வீழும் கண்ணீர்
திவலைகளை
எந்த கவிதையில்
குறிப்பெடுப்பது சொல்!!

காதலி எனும்
ஸ்தானத்தில்
மாட்டியிருக்கும்
உன் புகைப்படத்தில்
மனைவியாக‌
புன்னகைக்கிறாய்!!

உன் விம்பத்தில்
ஒளி தரித்த‌
கவிதைகளின்
உனக்கான‌
ஆலாபனைகளிலும்
மெளனமே
பரிசளிக்கப்படுகிறது!!

இதோ கவிதைகள்
அழுவதற்க்கான‌
அரங்கத்தை
ஆரம்பித்துவிட்டன!
என் கல்லறைமேல்
வீழ்ந்து கிடக்கும்
தேமா மலர்களை
அகற்றிக்கொண்டு…

சித்தரிக்க இயலாத‌
அர்த்தமற்ற
உன் மெளனத்தை
போலவே
அந்த‌ பூக்கள்!!

எதற்க்கானது!!?
மெளனம்..
எதற்க்கானது!!?
பூக்கள்..
ஆக்கம் புலவூரான் ரிஷி


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 பிப்ரவரி, 2015

சுப்பர் சிங்கர் போட்டியில் யெசிக்காவுக்கு தங்கம்

எல்லோரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
தமிழருவி ஆசிரியர் நயினைவிஜயன் எசன் அறநெறிப்பாடசாலை எசன் நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்வை ஊக்கப்படுத்திய முகநூல் நண்பர்களுக்கும் எஸ்.ரி.எஸ். ஸ்ருடியோ கோவில் டொட் கொம் வெற்றிமணிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். வெல்க தமிழ் வளர்க தமிழர் கலைகள் !
ரு கிலோ தங்கம் இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
இவரை 
சகல வளமுடன்  பல்லாண்டு காலம்வாழ  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நக்கீராவின் காதல்திவசம் எனும் கவிதை

கருணை இல்லங்களில் கதறுகின்றன எம் கருவறைகள்
தாயர் தினங்கள் கொண்டாடுகிறார்கள் “கருணைக்கடல்கள்”
உன்னை உயர்ந்தவனாக்க உருக்குலைந்தார் தந்தை -அவர்
சிந்தை சிதைய முதியோரில்லத்தில் வாழ்வது தான் விந்தை
கட்டில் பிணமாய் ஆக்கினான் உயிருள்ள பெண்ணை
பெண்கள் தினமென உச்சரித்தான் ஒரு எண்ணை
தொழிலே இல்லாது போனான் உலகில் தொழிலாளி
தொழிலாளர் தினத்தைக் கொண்டுகிறான் முதலாளி

தினமின்றிப் போன தினங்களே தினங்கள்
கனங்கொண்டு வாழும் தினங்களில் மனங்கள்
காதல் எல்லாம் கருவின்றிப் போச்சு
காதலர் தினமும் கருக்கொள்ளலாச்சு
செத்தவர்க்கு செய்வார்கள் நினைவுகொள்ள திவசம்
காதலுக்கும் காதலர்கள் செய்கிறார்கள் காதல்திவசம்
காதலர் தினமாம் போதகன் செத்த14 மாசி
கல்லறையில் கதறுகிறது காதல் நீ யோசி
தினம் தினம் தினங்கள்
தினம் வந்த போகும்
இனம் இனம் இனமாய்
மனம் கொண்டு ஆடும்
சினம் சிந்திப் போக
சிறுமை நின்று ஏங்கும்
கனம் கொண்ட தினங்கள்
மனமின்றியும் வாழும்
ஆக்கம் நோர்வே நக்கீரா

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 30 ஜனவரி, 2015

அதிரடி விலைக் குறைப்பு மா.சீனி..பால்மா!!

வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல் 
இன்று முதல் விலை குறைக்கப்படும் பொருள்களின் விபரம்
இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் மா, சீனி, பால்மா உள்ளிட்ட 13 பொருள்களின் விலைகள்
  சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
 400கிராம் பால்மா 61  ரூபாவால் குறைக்கப்பட்டு 325 ரூபாவுக்கு விற்பனை
 சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும்
 நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
 கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு 
 மாசிக் கருவாடு ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு  
 பாணின் விலை 6 ரூபாவால் குறைப்பு மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
 நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 
 வீதத்தால் குறைக்கப்படும்
ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா 
 விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
 விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் 
 கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
 வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
 பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 20 ஜனவரி, 2015

13வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா 19.01.15.

பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன்  தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
திருமண வாழ்த்து கவிதை
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும்
உயிருண்டென!
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
இவர்களின்
 நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
இனியதிருமணநாள் நல் நல்வாழ்த்துகள்..


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 டிசம்பர், 2014

இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல.

நானும் ரஜனி ரசிகன்தான். ரஜினியின் பின்னனிச் செயல்பாடுகள் எனக்குத் தெரியாத வரைக்கும் நான் ரஜினியை எதுவும் சொல்லப் போவதில்லை. விமர்சிக்கவும் முடியாது. நான் கேட்பதெல்லாம் உங்களை நோக்கிதான்.

ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவரது பிறந்தநாளை விளம்பரப்படுத்தி இங்கிருக்கும் மீடியாக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவரது புகழைத் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இங்கும் அது அவர்கள் தவறில்லை.

ஏமாறும் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எவரேனும் ஒருவர் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். வளங்கள் சுரண்டப்படுவது நேரடியாகத்தான் நிகழ வேண்டும் என்பதில்லை. முற்காலத்தில் படையெடுப்பு என்று வந்தார்கள். இப்பொழுதெல்லாம் கூடிக்கெடுக்கும் தந்திரம்தான். அதற்கு அடிப்படை உங்களின் அறியாமை.

தமிழ்நாட்டின் உற்பத்தியையும், இங்கு பெருக்கப்பட்ட பணத்தையும், அண்டை மாநிலங்களில் இருக்கும் சபரி மலையிலும், திருப்பதியிலும் எந்தவித மறுகொள்முதலும் இல்லாது கொட்டிவிட்டு வருகின்றீர்கள். கேட்டால், அன்னாரின் அருள் கிடைக்கும் என்பீர்கள். நீ ஏன் எங்கள் நம்பிக்கையில் குறுக்கிடுகிறாய் என்றும் திரித்துக் குரல் எழுப்புவீர்கள்.

ஒரு நடிகரின் நடிப்பிற்கு கோடிக்கணக்கில் சம்பளம். எல்லாம் மக்களாகிய நம் பணம். அந்தப் பணம் எல்லாம் எங்கே போயின? தமிழ்நாட்டில் ஏதேனும் வளர்ச்சிப்பணிகளுக்காக அவை செலவழிக்கப்பட்டனவா? உயிரைக்கொடுக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு ஏதேனும் உதவியாக இருந்திருக்கின்றதா? திருமணம் செய்து வைக்கிறார், சமூக சேவை செய்கிறார் என்ற சமாளிப்பிற்கெல்லாம் ஏமாந்து போகாதீர்கள்.

"வாங்குங் கவளத்தொரு சிறிது வாய் தப்பின் தூங்குங் களிறோ துயருறா..." என்ற நீதிநெறிப்பாடல் தெரியுமா உங்களுக்கு? பல கோடிகளில் இறைக்கப்படும் சில்லறைகள் உங்களைத் திருப்திப்படுத்திட போதும் என்பது ஒரு இழிநிலை. அவர் பணம் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார். அதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எத்தனை பேர் அடுத்த வேளை உணவிற்கு வழி இல்லா விட்டாலும், கடன் பட்டாவது முதல் நாள் அதிக விலை கொடுத்து நுழைவுச் சீட்டு பெற்று அவரது திரைப்படத்தை பார்க்கின்றனர்.

செய்தி ஒன்றில் படித்தேன், வீட்டில் இருக்கும் நகையைத் திருடி ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ஒரு சிறுவன் படம் பார்த்திருக்கிறான். என் நண்பர் ஒருவர், அவர் மனைவி குழந்தைகளோடு அன்றைக்கு கோயிலுக்குப் போகலாம் என்று திட்டம் போட்டுவிட்டு, இவர் பாட்டுக்கு லிங்கா திரைப்படம் பார்க்கப் போய் விட்டார்.

உருவப்படத்திற்கு பாலாபிஷேகம், வெடிகள், வெற்றுக்கூச்சல்கள், சண்டை சச்சரவுகள், கூட்டநெரிசலில் உயிர்ப்பலி, எத்தனை எத்தனை....

இப்படி தனிமனித இழப்புகள் நிறைய உள்ளன. சரி, முதல் நாளே போய்ப் பாருங்கள். உங்கள் ஆர்வம் எனக்கொள்ளலாம். ஆனால், எதற்காக அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டும்? என்றைக்காவது யோசித்திருக்கின்றீர்களா? இங்கேதான் உங்கள் உழைப்பு, உங்கள் நேரம், உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் உங்களிடமிருந்து சுரண்டப்படுகின்றது.

இப்படி ஒவ்வொருத்தருடையதாகச் சுரண்டப்படுவதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தினுடையதும் சுரண்டப்படுகின்றது. நிற்க இது மாநிலப் பிரச்சனையாகச் சொல்லவரவில்லை. மொத்தத்தில் ஒரு இடத்தின் வளம் அநியாயமாக அறியாமையினால் சுரண்டப்படுகின்றது.

ரஜினி, அவர் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் என்று ஒரு நாள் எவரேனும் வெளிப்படுத்துகையில் எல்லோரும் அவரை இகழ்வீர்கள். அப்பொழுது கூட நீங்கள் செய்த தவற்றினைச் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள்.

என்னதான் செய்வது? அதிகக் கட்டணம் கொடுத்து முதல் நாளே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள். அவர்கள் உங்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் இல்லை. அவர்கள் உங்களுக்கான வழிகாட்டியும் இல்லை. அவர்கள் பிழைப்பை அவர்கள் பார்க்கின்றார்கள். திரைப்படத்தில் அவர்கள் பேசும் வசனங்கள் எவரோ எழுதிக்கொடுத்ததுதான். உங்கள் ரசனையை, கைதட்டல்களை அவர்கள் காசாக்கிக் கொள்கின்றார்கள். உங்களை வழிப்படுத்தவோ பண்படுத்தவோ அந்த வசனங்களை அவர்கள் பேசுவதில்லை.

மறுபடியும் சொல்கிறேன், இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல. உங்களின் மடத்தனங்களைச் சுட்டிக்காட்டும் பதிவுதான் இது. வாய்ப்பு இருக்கின்றவன் சம்பாதிக்கும் மட்டும் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்கிற கொள்கை உடைய நாட்டில் வாய்ப்பில்லாதவன் வாய் பார்த்துக்கொண்டே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றானே என்ற ஆதங்கத்தில் எழுதுவது.

பெரும்பாலோரை இதனைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் படத்தைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 12 டிசம்பர், 2014

இருவருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் பெண் மரணம்.

அச்சுவேலியின் தென்மூலைப் பகுதியில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலை தடுக்க சென்ற மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான பெண் சம்பவ இடத்திலயே அகால மரணம் அடைந்தார் அவரின் இறுதி ஊர்வலம்  நடை பெற்றது அவரது பூதஉடல் மேலதிக விசாரணைக்காக புதைக்கப்பட்டது. தேவராசா மனோரம்மா